17 வயது மாணவியுடன் தொடர்பு: சுவிஸ் ஆசிரியர் பணிநீக்கம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 17 வயது மாணவியுடன் தொடர்பு வைத்திருந்த ஒரு ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Aargauவைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தனது மாணவி ஒருவருடன் முறைதவறிய உறவு வைத்திருந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Wettingenஇலிருக்கும் அந்த பள்ளி, மாணவியின் நலன் கருதி, அந்த மாணவி குறித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.

அந்த ஆசிரியர் ஏற்கனவே மாணவிகளை தவறாக கமெண்ட் அடிப்பவர் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

பல மாணவிகளும் தங்களுக்கு இந்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்தனர்.

தற்போது ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்வதற்கான வயது 16 என நிர்ணயிக்கப்பட்டு விட்டாலும், பதின்ம வயதினருக்கு பொறுப்பாக உள்ளவர்கள் அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சட்ட விரோதமாகும்.

அந்த ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டாலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers