ஹாரர் படத்தில் பங்கேற்ற அலுவலரை பணி நீக்கம் செய்த சூரிச் பொலிசார்: பின்னணி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஹாரர் படம் ஒன்றில் பங்கேற்ற அலுவலரை பணி நீக்கம் செய்த சூரிச் பொலிசார் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

சூரிச் பொலிஸ் துறையில் பணியாற்றிய ஒருவர், ஹாரர் படம் ஒன்றில் பணியாற்றியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான அந்த நபர் விடுப்பு எடுத்துக் கொண்டு அந்த படத்தில் திரைக்கதை எழுதுபவராக பங்கேற்றார்.

அவர் பங்கேற்ற ‘Mad Heidi’ என்னும் அந்த திரைப்படம் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என்பது தெரியவந்ததும், அதிலிருந்து விலகுமாறு அவரது உயர் அதிகாரிகள் அவரை எச்சரித்திருக்கின்றனர்.

ஆனால் அதற்கு அவர் செவிசாய்க்காததால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் ஒருவர், சூரிச் பொலிசாரின் குணாதிசயங்களுக்கு மாறான படம் ஒன்றில் பணியாற்றுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர், தனது திரைக்கதை ஆசிரியருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இந்த பணிநீக்கம் ஒருவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்கிறார் அவர்.

அவரும் பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த நபரும் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கு தொடுக்க உள்ளனர்.

அந்த படத்தைப் பார்த்தால் அவரை பணிநீக்கம் செய்தது நியாயமா இல்லையா என்பது ஒருவேளை புரியுமோ என்னவோ.

வீடியோவை காண

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers