விளையாட்டு வினையான கதை: சுவிஸ் இளைஞருக்கு 99,176 பிராங்குகள் அபராதம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் என விளையாட்டாக அறிவித்த இளைஞருக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று பாஸல் பகுதியில் இருந்து 26 வயது இளைஞர் ஒருவர் Arisdorf பகுதிக்கு இரவில் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட தடத்தில் பேருந்தை நிறுத்தும் பொருட்டு, தமது மொபைலில் விஷவாயு தாக்குதல், வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வார்த்தைகளை உருவிட்டுள்ளார்.

சம்பவம் நடக்கும் சில தினங்களுக்கு முன்னரே பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 22 பேர் கொல்லப்பட்டதுடன் 139 அப்பாவி மக்கள் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞரின் உரையாடல்கள் அச்சுறுத்துவதாக அமைந்ததால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஜூன் மாதம் 6 ஆம் திகதி அந்த இளைஞரும் கைதானார்.

ஆனால், குறித்த இளைஞரின் உரையாடலில் சந்தேகம் விலகாத பொலிசார் குறித்த இளைஞரின் குடியிருப்பு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

இருப்பினும் அந்த இளைஞருக்கு எதிராக எந்த தடயங்களும் சிக்கவில்லை. இறுதியில் தொடர்புடைய இளைஞர் மேற்கொண்டது புரளி என நிரூபணமானது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முடிவடைந்த நிலையில், இதுவரையான அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கான இழப்புத் தொகையை அந்த இளைஞர் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சுமார் 99,176 பிராங்குகள் நீதிமன்றத்தில் செலுத்த கடந்த 8-ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers