சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த பிரித்தானிய பெண்ணின் காதலர் இவர்தான்: அது விபத்தா, கொலையா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் காதலருடன் தங்கியிருந்த பிரித்தானிய இளம்பெண், பாலுறவு விளையாட்டு ஒன்றின்போது தவறு நேரிட்டதால் உயிரிழந்ததாக அவரது காதலர் தெரிவித்துள்ள நிலையில், அது விபத்தா அல்லது கொலையா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த Anna Florence Reed (22), தனது காதலரான ஜேர்மானியர் ஒருவருடன் சுவிட்சர்லாந்தின் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும்போது பாலுறவு விளையாட்டு ஒன்று தவறாகப் போனதால் உயிரிழந்ததாக அவரது காதலர் தெரிவித்தார்.

தற்போது அந்த காதலர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நபரின் பெயர் Marc Schatzle (29) என்று தெரியவந்துள்ளதோடு, அவர் ஒரு ஜேர்மானியர், ஜேர்மனியில் வசிக்கிறார், அவ்வப்போது அவர் சூரிச்சுக்கு வருவதுண்டு என சில தகவல்களை அவருக்கு சிகையலங்காரம் செய்யும் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

நேற்று Marcஐ சிறையில் சென்று விசாரித்த அரசு வழக்கறிஞர், அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், செவ்வாய் அதிகாலை 6.30 மணியளவில் Annaவின் காதலர் Marc, ஹோட்டலின் ரிசப்ஷனுக்கு சென்று தனது காதலிக்கு மருத்துவ உதவி தேவை சென்று கூறியதாக ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது பதற்றத்தைக் கண்ட ஹோட்டல் ஊழியர்கள் ஆம்புலன்சை அழைக்க, மருத்துவ உதவிக்குழுவினர் சென்று பார்க்கும்போது Anna பாத்ரூம் வாசலில் இறந்து கிடந்திருக்கிறார்.

உடனடியாக பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்ட Annaவின் காதலர் Marcஇடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தாங்கள் முயற்சித்த பாலுறவு விளையாட்டு ஒன்றின்போது Anna இறந்துபோனதாகவே அவர் தொடர்ந்து கூறியுள்ளார்.

ஆனால் ஹோட்டல் ஊழியர்களை விசாரித்தபோது, அவரது அக்கம் பக்கத்து அறையில் இருந்தவர்கள், Annaவின் அறையில் அதிகாலை 3 மணியளவில் கடும் வாக்குவாதம் நடந்ததை தாங்கள் கேட்டதாகவும், Anna அலறும் பயங்கர சத்தம் கேட்டதாகவும் ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.

கொலைக்கு சற்று குறைவான ஒரு வழக்கு Marc மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல் ஊழியர்கள் அளித்துள்ள தகவலின்படி பார்க்கும்போது, இது விபத்தா அல்லது கொலையா என்னும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்