இளம்பெண்கள் கொடூர கொலை: வெளிநாட்டில் கடுமையான தண்டனை பெற்ற சுவிஸ் நபர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

மொரோக்கோ நாட்டில் சுற்றுலாப்பயணிகள் இருவரை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிக்கிய சுவிஸ் நாட்டவர்கள் இருவரில் ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்றுள்ள விவகாரம் அவரது குடும்பத்தாரும் உறுதி செய்துள்ளனர். மேலும், தண்டனை தொடர்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்காண்டிநேவிய சுற்றுலாப்பயணிகள் இருவர் மொரோக்கோ நாட்டில் மத அடிப்படைவாத கும்பலால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரின் சடலங்களும் டிசம்பர் 17 ஆம் திகதி உள்ளூர் பொலிசாரால் மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Marrakech பகுதியில் இருந்து நான்கு முக்கிய குற்றவாளிகளையும் பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 20 பேரில் இருவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இந்த நிலையில் கைதாகியுள்ள சுவிஸ் நாட்டவர்களில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஞ்சிய ஒருவர் விசாரணை கைதியாக சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்பான விசாரணை எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்