காபி குறித்த சுவிட்சர்லாந்தின் கருத்து: எழும் விமர்சனங்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

காபி என்பது மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய பொருள் அல்ல என்ற சுவிட்சர்லாந்தின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

உயிர் வாழ அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வைப்பது உலகப்போர் சமயத்திலிருந்தே சுவிட்சர்லாந்தின் வழக்கம்.

அதன்படி 3 மாதங்களுக்கு போதுமான அளவு காபிக்கொட்டைகள் சேமித்து வைக்கப்படுவது உண்டு.

அந்த வழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தற்போது சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.

காபி என்பது மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய பொருள் அல்ல என்பதால் காபிக்கொட்டைகளை சேகரித்து வைக்க வேண்டியதில்லை என அரசு முடிவு செய்துள்ளது.

பொதுவாக காபி, சர்க்கரை, அரிசி, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் சேமித்து வைக்கப்படுவதுண்டு.

ஆனால் புதனன்று அவசர கால பொருட்களை மீளாய்வு செய்ததில், காபி என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான பொருள் அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காபியில் கலோரிகள் குறைவாக உள்ளன, தேவையான சத்துக்களையும் அது கொடுப்பதில்லை என்று சுவிஸ் பொருளாதார வழங்கல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான இறுதி முடிவு நவம்பர் மாதம் எடுக்கப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தின் காபி குறித்த கருத்திற்கு சமூக ஊடகத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டரில் நமது சுவிஸ் அயலகத்தார் எடுத்துள்ளது முட்டாள்தனமான முடிவு என்று தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியைச் சேர்ந்த Greg McNevin, தான் பார்க்க விரும்பிய முக்கிய நாடுகள் பட்டியலிலிருந்தே சுவிட்சர்லாந்தை நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த Ally Suart, ஒரு தந்தையாக தான் செய்யும் வேலைகளால் ஏற்படும் களைப்பை நீக்குவதால் காபி அத்தியாவசியமானதுதான் என்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers