சுவிட்சர்லாந்தை உலுக்கிய சிறுமி தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய விவகாரம் தொடர்பில் இரு இளைஞர்கள் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் Spreitenbach பகுதியில் குடியிருந்துவந்த 13 வயது சிறுமி,

இணையம் வழியாக தொடர் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் நடந்த சில வாரங்களில் சிறுமி ஒருவரின் புகைப்படத்துடன், வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்தது.

அதில், இளைஞர் ஒருவர், குட்டி பாலியல் தொழிலாளியே, உன்னை நாங்கள் கண்டுபிடிப்போம், எப்படி நீ சாகப்போகிறாய் என்றும் தெரியும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வீடியோவானது சுவிட்சர்லாந்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை முழுவதும் முடிவடைந்த நிலையில், சூரிச் நகரில் உள்ள Dietikon பகுதியில் குடியிருக்கும் அந்த இளைஞர் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு சமூக சேவையில் ஈடுபட வலியுறுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால அளவு கொண்ட இதில் அவரது தனிப்பட்ட செயல்திறன் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்