சுவிஸில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தமிழர்களின் தவக்கால திரு யாத்திரை

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பிரசித்திப்பெற்ற அயின்சீல்டன் திருத்தலத்தில் தமிழ் மொழியில் தவக்கால திரு யாத்திரை மிகவும் பக்திப்பூர்வமாக நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இயேசுக்கிறிஸ்துவின் திருப்பாடுகளை அனுஸ்டிக்கும் வகையில் சிலுவைப்பாதை, ஒப்புரவு(பாவமன்னிப்பு), திருப்பலி என்பன இடம்பெற்றன.

அயின்சீல்டன் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து மதியம் 12.00 மணியளவில் சிலுவைப் பாதை திருயாத்திரை ஆரம்பமாகி பின்னர் ஆலயத்திற்கு சென்றதும் ஒப்புரவு அருட்சாதனம் ஏழு தமிழ் அருட்தந்தையர்களும், ஜேர்மன் மொழியின் மூலம் இரண்டு அருட்தந்தையர்களாலும் வழங்கப்பட்டது.

அதன் பிறகு நான்கு அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர்.

இதனைத் தொடர்ந்து 2019 தொடக்கம் 2020ஆம் ஆண்டிற்கான சுவிஸ் தமிழ்க்கத்தோலிக்க அருட்பணிப் பேரவையின் பணியாளர்கள் பணிப்பொறுப்புக்களை ஏற்றனர்.

இதில் சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களில் இருந்து பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers