இந்த ஆண்டு கோடை விடுமுறைக்காக வித்தியாசமாக முடிவெடுத்துள்ள சுவிஸ் மக்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தே ஒரு பிரபல சுற்றுலாஸ்தலமாக இருக்கும் நிலையிலும் சுவிஸ் நாட்டவர்களும் சுற்றுலா செல்லும் விருப்பம் உடையவர்கள்.

பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வழக்கம் உடைய சுவிஸ் நாட்டவர்கள் இம்முறை வேறெங்கும் செல்லாமல் தங்கள் நாட்டுக்குள்ளேயே சுற்ற முடிவு செய்துள்ளார்கள்.

அதற்கு முக்கிய காரணம் மற்ற நாடுகளில் காணப்படும் அதீத வெயிலும், சுவிட்சர்லாந்தில் காணப்படும் விரும்பத்தக்க சீதோஷ்ணமும் ஆகும்.

அதனால் Ticino மற்றும் Graubünden மாகாணங்களுக்கு சுற்றுலா செல்ல அதிகம்பேர் விரும்புகின்றனர்.

இஸ்லாமிய நாடுகளான எகிப்து, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு செல்லும் ஆர்வம் பெருமளவில் குறைந்துள்ளது.

இத்தாலி மொழி பேசும் பகுதிகளான Ticino மற்றும் Graubünden மாகாணங்களுக்கு அதிகம் செல்ல விரும்பும் மக்கள் அதற்கடுத்தபடியாக இத்தாலிக்கு செல்ல விரும்புகிறார்கள்.

அதைத் தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை விருப்ப சுற்றுலாஸ்தலங்களாக உள்ளன.

அவற்றைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கரீபியன், அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை விருப்ப சுற்றுலாஸ்தலங்களாக உள்ளன.

இம்முறை இஸ்லாமிய நாடுகளுக்கு செல்வதில் மக்கள் குறைந்த ஆர்வமே காட்டுகின்றனர்.

அதற்கு தீவிரவாதிகள் குறித்த பயம் காரணமில்லை என்று கூறும் சுற்றுலாப்பயணிகள், பாதுகாப்பு கருதியே அவ்வாறு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பிரான்சில் நடக்கும் மஞ்சள் மேலாடை போராட்டங்கள் தென்னாப்பிரிக்காவில் காணப்படும் பதற்றமான சூழல் ஆகியவை அந்த நாடுகளுக்கு மக்கள் செல்ல விரும்பாததற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்