மீண்டும் சுவிஸ் நீதிமன்றத்தில் விடுதலை புலிகள் வழக்கு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

அட்டார்னி ஜெனரல் அலுவலகத்தின் புகார் ஒன்றைத் தொடர்ந்து, சுவிஸ் ஃபெடரல் நீதிமன்றம் விடுதலை புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பா என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 13 பேர், குற்றவியல் அமைப்பு ஒன்றிற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட இயலவில்லை என அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அட்டார்னி ஜெனரல் அலுவலகம் புகார் ஒன்றை அளித்துள்ளது.

புகாரளிக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ள அட்டார்னி ஜெனரல் அலுவலக செய்தி தொடர்பாளர் ஒருவர், எதற்காக தொடர்ந்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

ஒன்பது ஆண்டுகள் நீடிக்கும் விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், உலக தமிழ் ஒருங்கிணைப்பு கமிட்டிக்கு (WTCC) நிதி உதவி செய்கின்றனரா என்ற சந்தேகம் அட்டார்னி ஜெனரல் அலுவலகத்திற்கு ஏற்பட்டது.

2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஃபெடரல் குற்றவியல் நீதிமன்றம், LTTEக்கும் WTCCக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்ய இயலவில்லை என தெரிவித்தது.

அத்துடன் LTTE ஒரு குற்றவியல் அமைப்பு என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை என்றும் நீதிபதிகள் கருதினர்.

இருந்தாலும் வர்த்தக ரீதியான மோசடி மற்றும் ஆவண மோசடி குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேருக்கு நீதிமன்றம் நிபந்தனைக்குட்பட்ட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers