சுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் ? சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சமீபத்தில் சுவிஸ் ஃபெடரல் பொலிஸ் அமைப்பாகிய ஃபெட்போல் வெளியிட்டுள்ள தனது ஆண்டு அறிக்கையில், சுவிட்சர்லாந்திலுள்ள ஜிகாதிகளைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஜிகாதிகள் என்பவர்கள் சர்ச்சைக்குரிய நாடுகளான சிரியா அல்லது ஈராக் போன்ற நாடுகளுக்கு பயணிப்பவர்கள் அல்லது பயணிக்க விரும்புபவர்கள்.

இவர்களில் பெரும்பாலோர் போராளிகளாக இருக்கும் நிலையில், மற்றவர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளை மணந்து கொண்ட பெண்கள் அல்லது அவர்களுக்கு உதவுபவர்கள்.

இவர்களில் சிலர் சர்ச்சைக்குரிய இடங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது சிறையிலிருக்கிறார்கள்.

மற்றவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். இது போக மீதமுள்ளவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு செல்லவில்லை அல்லது சென்று திரும்பி விட்டார்கள்.

சுவிஸ் உளவுத்துறையின் கணக்குபடி நவம்பர் 2018இலிருந்து சர்ச்சைக்குரிய இடங்களுக்கு பயணித்தவர்கள் 92 பேர்.

அவர்களில் 31 பேர் கொல்லப்பட்டு விட்டதாக கருதப்படுகிறது. மற்றும் அவர்களில் 16 பேர் வரை சுவிட்சர்லாந்துக்கு திரும்பி விட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...