புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு சுவிஸ் நிறுவனம் அளித்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.

சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும் (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) 14 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிப்பதாக அறிவித்தது.

தற்போது சுவிஸ் Volvo நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் மகப்பேறு விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்திலேயே Volvo நிறுவனம்தான் இந்த அளவு அதிக விடுமுறை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார் தயாரிப்பு நிறுவனமான Volvo நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குழந்தை பிறக்கும் பட்சத்தில், குழந்தையின் அப்பாவானாலும் சரி, அம்மாவானாலும் சரி, யார் தனது ஊழியர்களோ அவர்களுக்கு 80 சதவிகித ஊதியத்துடன் 24 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிப்பதாக, வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

குழந்தைகளை தத்து எடுப்பவர்களுக்கு இதே விடுப்பு பொருந்தும்.

குழந்தை பிறந்து அல்லது, தத்து எடுக்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers