மரணத்தில் முடிந்த காதல் விளையாட்டு... சம்பவத்தன்று நடந்ததென்ன? காதலனின் பகீர் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய இளம்பெண் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் அவரது காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜேர்மன் நாட்டவரான 29 வயது மார்க் ஷாஸில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருந்து வருகிறார்.

மதுபான விடுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் மார்க் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

லொகார்னோ அருகே ஹொட்டல் ஒன்றில் பிரித்தானியரான தமது காதலியுடன் தங்கியிருந்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது.

ஹொட்டல் அறையில் இருந்து 22 வயதான அன்னா ரீட் என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அன்னா ரீட் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் காதல் விளையாட்டுகள் எதிர்பாராத வகையில் தவறாக செல்லவே, அதில் இளம்பெண் அன்னா கொல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது முதன்முறையாக மனம் திறந்துள்ளார் மார்க்.

அன்னாவுடன் வாழ்ந்த அந்த 3 மாத காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறும் மார்க், இருவரும் நாள்தோறும் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தாய்லாந்தில் தாம் தங்கியிருந்த காலகட்டத்தில் கற்றுக்கொண்ட பாலியல் தொடர்பான பயிற்சிகளை இருவரும் முயற்சித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறிப்பிட்ட பயிற்சிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதும் இருவருக்கும் தெரியும் எனவும்,

ஆனால் அன்னா இந்த முயற்சிகளில் மிகவும் ஆர்வம் காட்டி வந்ததாகவும் மார்க் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த ஏப்ரல் 9 ஆம் திகதியும் பாலியல் விளையாட்டில் இருவரும் பல மணி நேரம் செலவிட்டதாக கூறும் மார்க்,

அன்னாவை கொலை செய்யும் எந்த நோக்கமும் தமக்கு இல்லை எனவும், அதற்கான காரணம் வாழ்க்கையில் எழுந்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 3 மணி அளவில் இருவரும் தங்கள் ஹொட்டல் அறைக்கு திரும்பியதாக கூறும் மார்க், அதன் பின்னரே உறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் குளியல் அறைக்கு சென்றுள்ளனர். அங்கே பாலியல் விளையாட்டின் ஒருபகுதியாக மார்க் துண்டு ஒன்றால் அன்னாவின் கழுத்தை நெரித்துள்ளார்.

ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த அன்னா, துண்டால் கழுத்தை மேலும் நெரிக்க நிர்பந்தித்துள்ளார்.

சுமார் 6.30 மணியளவில் ஹொட்டல் ஊழியர்களிடம் உதவிக்கு கோரியுள்ள மார்க், தமது காதலி சுய நினைவை இழந்த நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அன்னா ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக பின்னர் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்