சொந்த குடியிருப்புக்கு முன்பு மர்ம நபர்களால் நேர்ந்த துயரம்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 57 வயது நபர் சொந்த குடியிருப்புக்கு முன்பு மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் ஞாயிறன்று குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் நேரப்படி 3.15 மணியளவில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த பொலிசார் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் குற்றுயிராக கிடந்த அந்த 57 வயது நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட நபர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் குடியேறியவர். கடந்த பல ஆண்டுகளாக ஆர்காவ் மண்டலத்தின் Killwangen பகுதியிலேயே குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

குடும்ப விழா ஒன்றில் கலந்துகொண்டு திரும்பியவரை, மர்ம நபர்கள் மறைந்திருந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers