மங்கோலியாவில் சிக்கிக் கொண்டுள்ள சுவிஸ் சுற்றுலாப்பயணிகள்: சோகப்பின்னணி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

மங்கோலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ள சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் பலர், அங்கு பிளேக் நோய் பரவுவதால் நாடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.

மங்கோலியாவில் bubonic plague என்னும் பிளேக் நோய் பரவி இரண்டு பேர் பலியானதையடுத்து சுவிட்சர்லாந்து திரும்ப முடியாமல் அவர்கள் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நோய் பரவாமல் தடுப்பதற்காக மக்கள் தாங்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் ஹொட்டல்களுக்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதையடுத்து சுவிஸ் சுற்றுலாப்பயணிகள் Ulgii நகரிலேயே இருக்கிறார்கள்.

அங்கு திருமணமான ஒரு தம்பதியர் பிளேக் நோய் காரணமாக உயிரிழந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. Marmot எனப்படும் காட்டு அணிலின் இறைச்சியை பச்சையாக உண்டதையடுத்து அவர்களுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது.

சுவீடன், தென் கொரியா, ஜேர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 158 சுற்றுலாப்பயணிகள் வரை இந்த பிரச்சினை காரணமாக மங்கோலியாவில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அதேபோல் பயண தடை காரணமாக சுமார் 10 சுவிஸ் சுற்றுலாப்பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ள செய்தியை சுவிஸ் ஃபெடரல் வெளி விவகாரத்துறையும் உறுதி செய்துள்ளது.

வெளி விவகாரத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர், மங்கோலியாவில் இருக்கும் சுவிஸ் சுற்றுலாப்பயணிகளின் உடல் நிலையில் எதுவும் பிரச்சினை இல்லை என்றும் விரைவில் அவர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Bubonic plague எனப்படும் பிளேக் நோய் எளிதில் உயிரை பாதிக்கக்கூடியது, ஆனால் விரைந்து நோயைக் கண்டு பிடித்து விட்டால் ஆண்டிபயாட்டிக்குகள் உதவியால் குணமாக்கிவிடலாம்.


மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers