இந்தாண்டில் மட்டும் 299 பனிச்சரிவு ..சுவிஸில் 19 பேர் பலி

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

சுவிச்சர்லாந்தில் இவ்வாண்டு குளிர்காலத்தில் ஏப்ரல் மாதம் இறுதிவரை சுமார் 299 பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பனிச்சரிவில் சிக்கி சுமார் 19 பேர் பலியாகியுள்ளதாக பனி மற்றும் பனிச்சரிவு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், அந்நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, 2018-19 ஆம் கடைசி குளிர்காலத்தில் சுவிஸ் ஆல்ப்ஸின் வடக்கு பகுதியில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பனிச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிந்துள்ளனர்.

கடைசி குளிர்காலத்தில் ஏப்ரல் மாதம் இறுதிவரை சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் மொத்தம் 299 பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த 20 வருடங்களாக ஆண்டுதோறும் குளிர்காலத்தில் பனிச்சரிவில் சிக்கி சராசரியாக 21 பேர் உயிரிழக்கின்றனர்.

இந்த ஆண்டு உயிரிழந்த 19 பேர்களில் அதிகபடியானோர் பாதுகாப்பற்ற நிலப்பரப்பில் இருந்த குளிர்கால விளையாட்டு வீரர்கள்.

பனி மற்றும் மலை விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் இளவேனிற்காலம் மற்றும் கோடைகாலத்தில் பனிச்சரிவு அபாயத்தை குறித்து அறிந்திருக்க வேண்டும் என பனி மற்றும் பனிச்சரிவு ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers