பாஸல் விமானநிலையத்தில் மர்ம வாகனம்: வெடிகுண்டு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகளால் பரபரப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் விமானநிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புரளியை அடுத்து சில மணி நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

குறித்த சம்பவத்தால் விமானநிலையம் அருகே வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களை அவதியில் ஆழ்த்தியுள்ளது.

பாஸலின் யூரோ விமானநிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

பகல் 10.43 மணியளவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாகனம் ஒன்றை பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.

மட்டுமின்றி யாரும் உரிமை கோராத பை ஒன்றையும் அதிகாரிகள் தரப்பு மீட்டுள்ளனர். இதில் கலவரமடைந்த விமானநிலைய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பொதுமக்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

பின்னர் சுமார் 12.30 மணியளவில் சோதனைகளை முடித்த அதிகாரிகள் பொதுமக்களை அனுமதித்துள்ளனர்.

இதே நிலை மாலை 5.15 மணியளவிலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வெடிகுண்டு ஏதும் இல்லை எனவும், சந்தேகத்தின்பேரிலே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers