சுவிட்சர்லாந்தில் பெண் பொலிசார் முன்பு இளைஞரின் அருவருப்பான செயல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு இளைஞர் ஒருவர் விசாரணையின்போது பெண் பொலிஸ் முன்னிலையில் அருவருப்பான செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் எல்லையில் அமைந்துள்ள Feldkirch நகரத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் 22 வயதான ருமேனியா இளைஞர் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்படார்.

அப்போது அவரை இளம்வயது பெண் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். அவருக்கு மொழிப்பெயர்ப்பாளராக 71 வயது பெண் ஒருவரும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த இளைஞர் தமது ஆண் உறுப்பால் அருவருப்பான செயலில் ஈடுபட்டுள்ளார்.

மட்டுமின்றி குறித்த பெண் பொலிசாரை நோக்கி கேவலமாகவும் சிரித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிந்த பொலிசார் வெள்ளியன்று பிராந்திய நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதில், தமது வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு அருவருப்பான செயலை அலுவலக வேளையில் எதிர்கொண்டது இல்லை எனவும்,

அந்த இளைஞர் அவ்வாறு நடந்துகொண்டதால் விசாரணையை முடித்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள குறித்த இளைஞர், பொலிசார் தம்மை சிக்க வைக்க பொய் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துள்ளதுடன், தொடர்புடைய இளைஞருக்கு நிபந்தனையுடன் கூடிய 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்