இந்த தியேட்டரில் ஜோடியாக படுத்துக்கொண்டே சினிமா பார்க்கலாம்: ஆனால்...

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஜோடியாக படுத்துக் கொண்டே சினிமா பார்க்கும் வசதி கொண்ட தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஒழுக்கக்கேடான செயல்கள் ஏதாவது நடக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Spreitenbach பகுதியில் VIPகளுக்கான படுக்கையறை தியேட்டர் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த தியேட்டர் பார்ப்பதற்கு படுக்கையறை போலவே இருக்கிறது, ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒரே அறையில் இரண்டு பேர் படுக்கும் வசதி கொண்ட 11 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்து கொண்டே வசதியாக படம் பார்ப்பதை எளிதாக்கியுள்ள Netflix போன்றவற்றிலிருந்து மக்களை மீட்டு, மீண்டும் அதே வசதியுடன் வீட்டிலிருந்தே சினிமா பார்க்கும் உணர்வை அளிப்பதற்காக இந்த தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

படம் பார்ப்பவர்கள் அயர்ந்து உறங்கிவிடுவதை தவிர்ப்பதற்கான மின்னணு கருவிகளும் இந்த கட்டில்களில் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு காட்சியைத் தொடர்ந்தும் இந்த கட்டில்களில் போடப்பட்டிருக்கும் மெத்தைகள் தலையணைகள் மாற்றப்படும், மக்களின் சுகாதாரம் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்கிறார் இந்த திரையரங்கின் முதன்மை செயல் அதிகாரியான Venanzio Di Bacco.

அத்துடன் இரண்டு பேர் ஜோடியாக படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வசதி இருப்பதால் ஏதேனும் ஒழுக்கக்கேடான அல்லது முறையற்ற செயல்களில் படம் பார்ப்போர் ஈடுபடலாம் என்னும் விமர்சனத்தையும் Venanzio Di Bacco நிராகரித்துள்ளார்.

இந்த தியேட்டர் சுவிட்சர்லாந்துக்கென்றே தனித்துவமாக அமைக்கப்பட்ட தியேட்டர் என்றாலும், ஏற்கனவே வெளிநாடுகளில் இதை முயற்சித்து பார்த்து பிரச்சினைகள் ஏற்படவில்லை என்று தெரியவந்த பின்னரே இதை சுவிட்சர்லாந்தில் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார் அவர்.

இதுபோக, சாதாரணமாக அமர்ந்து சினிமா பார்க்க விரும்புபவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் ஏற்ற வகையிலும் இதே தியேட்டர் காம்ப்ளக்சில் பல திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்