பேத்தியின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட பெண்ணுக்கு தடை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தனது பேத்தியின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட ஒரு பெண்ணுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

பெர்ன் பகுதியைச் சேர்ந்த அந்த ஏழு வயது சிறுமியின் தாயார், தனது மகளின் புகைப்படங்களை அவளது பாட்டி வெளியிடுவதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் புகாரளித்தார்.

எனவே ஏஜன்சி அந்த பாட்டிக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு கோரியிருந்தது.

ஆனால் அந்த பாட்டியோ, தன்னை புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த சொல்லக்கூடாது என்றும், தான் அவளது நிர்வாண படங்களை வெளியிடவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.

அவர் தொடர்ந்து அந்த சிறுமியின் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடவே, சிறுவர் பாதுகாப்பு ஏஜன்சி, தங்கள் உத்தரவுக்கு கீழ்ப்படியாவிட்டால் சட்ட ரீதியாக அவர் தண்டிக்கப்படுவார் என அந்த பெண்ணை எச்சரித்துள்ளது.

புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும்போது சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ள சிறுவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான Yvonne Feri, சிறுவர்களின் புகைப்படங்களை அவர்கள் முகம் தெரியும் வகையில் வெளியிடுவது அவர்களுக்கே பின்னர் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்