சுவிஸில் தாக்குதல் நடத்திய நவ நாஜிகளின் புகைப்படம் வெளியீடு

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிஸில் நவ நாஜிகள் என கூறப்படும் நபர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இடது மற்றும் வலதுசாரி பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இணையதளம் ஒன்றில் நவ நாஜி என கூறப்படும் 42 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சுவிஸ்ஸில் நடைபெற்ற இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் தான் ஆர்ப்பாட்டத்தின் போது பங்கேற்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டியதாக குறித்த இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இவர்களை பார்த்திருந்தாலோ, இவர்களை குறித்து தகவல் இருந்தாலோ தங்களை தொடர்புகொள்ளுமாறு புகைப்படங்களை வெளியிட்ட ரேச்செக் கொலேக்டிவிவ் உர்சுவிஸ் குழு தெரிவித்துள்ளது.

இதானல் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, இந்த இணையதளத்திற்கு பின்னால் இருப்பவர்கள் குறித்தும், புகைப்படம் வெளியிட்டவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக சுவிஸ்ஸில் மாகாண பொலிஸ் ஊடகப் போச்சாளர் டேவிட் மைநல் தெரிவித்துள்ளார்.

இது அவதூறு பரப்பும் குற்றமாகும், பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரு புகாரை பதிவு செய்ய வேண்டும் என பொலிஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers