ஈழ இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நாளில் சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் இலங்கையில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டில் அமைதியையும் நிலைத்தன்மையையும் பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும் தன்னாலான அனைத்தையும் செய்ய வேண்டும் என சுவிட்சர்லாந்து இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற ஈழ இனப்படுகொலையில் பத்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இந்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ளது.

30 ஆண்டுகள் நீடித்த போரின் விளைவாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 50,000கும் அதிகமானோர் சுவிட்சர்லாந்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்ததாக கருதப்படுகிறது.

இலங்கையில் கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களைத் தொடர்ந்து சிறுபான்மையினர் மற்றும் அகதிகளுக்கெதிராக தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

இது முரண்பாட்டுக்கான உண்மையான காரணம் சரியாக தெரிவிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து இலங்கையின் அமைதியையும் நிலைத்தன்மையையும் மீட்கும் முயற்சிகளுக்கு தனது ஆதரவை மீண்டும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

2009க்கும் 2016க்கும் இடையில் சுவிட்சர்லாந்து 5,000 பேருக்கான வீடுகளையும் 1,200 மாணவர்களுக்கான பள்ளிகளையும் நாட்டின் வடக்குபகுதியில் கட்டிக் கொடுத்தது.

வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜன்சியின் தற்போதைய இலக்கு பணி புலம்பெயர்தலின் மீது காணப்படுகிறது.

2018இல் இரு நாடுகளும் புலம்பெயர்தல் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

அந்த ஒப்பந்தம், ஆசிய நாடு ஒன்றுடன் சுவிட்சர்லாந்து செய்த முதல் ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்