சுவிட்சர்லாந்தை மிரட்டும் ஐரோப்பிய ஒன்றியம்.. பணியுமா சுவிஸ்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

ஐரோப்பாவிலே மிக அதிகமான ஆயுதமேந்திய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில், துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும் மசோதா மீதான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை என்றாலும், ஸ்ஹேன்ஜென் பகுதியில் ஒரு பாகமாக இருக்கிறது. 26 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த குடிமக்கள் விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாமல் ஸ்ஹேன்ஜென் பகுதிக்கு விஜயம் செய்யலாம்.

2015, 2016 ஆண்டுகளில் பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் துப்பாக்கி சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டு வந்தது. தற்போது, சுவிட்சர்லாந்தும் தனது சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருகிறது. இல்லையெனில் ஸ்ஹேன்ஜென் பகுதியிலிருந்து சுவிட்சர்லாந்து விலக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்து துப்பாக்கிச் சட்டமும் அமெரிக்க துப்பாக்கிச் சட்டமும் எறக்குறைய ஒத்துப்போகும். சுவிட்சர்லாந்தில் அடையாள அட்டையிருந்தால் துப்பாக்கி வாங்க அனுமதி அளிக்கப்படும். சுவிட்சர்லாந்தில் மட்டும் 1.2 மில்லியன் முதல் 4.5 மில்லியன் துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறைந்த அளவிலான துப்பாக்கி தொடர்புடைய குற்றங்களே இடம்பெறுகிறது. பெரும்பாலும் தற்கொலைக்கே துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது. சுவிஸில் 2001-2012 இடைப்பட்ட காலத்தில் 21.5 சதவீத போர் துப்பாக்கி பயன்படுத்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

எனினும், சமீபத்தில் மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 65 சதவீத பேர் துப்பாக்கி சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளனர். 34 சதவீத பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 1 சதவீத பேர் பதிலளிக்க மறுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers