சுவிட்சர்லாந்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு இழுக்கும் வெளிநாட்டவர்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற நபர் ஒருவர் தம்மீது இனவாத ரீதியான பாகுபாடு காட்டுவதாக கூறி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியரான 46 வயது பிரதீப் எஸ் என்பவர் கடந்த 2018 ஜனவரி மாதம் பாஸல் பல்கலைக்கழகத்தில் தமது முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

மேலும், அதற்கும் பல மாதங்கள் முன்னரே வேலை தேடும் முயற்சியையும் பிரதீப் முன்னெடுத்துள்ளார். ஆனால் அந்த முயற்சி அவருக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

இதனிடையே சுவிட்சர்லாந்தில் வேலையற்றவர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையானது பதிவு செய்தும் தமக்கு வழங்கப்படவில்லை என பிரதீபுக்கு தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பெடரல் நீதிமன்றத்தை நாடிய பிரதீபின் மனுவானது நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக பிரதீப் புகார் அளித்துள்ளார்.

அதில், சுவிட்சர்லாந்து தமது உரிமைகளை நிராகரித்ததுடன் தாம் இந்தியர் என்பதால் இனவாத ரீதியாக தம்மிடம் நடந்துகொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலையற்றவருக்கான ஊக்கத்தொகையானது பிரதீபுக்கு அளிக்கப்படாதது, அவர் குடியிருப்பு அனுமதி B பெற்றவர் எனவும், அத்துடன் கல்வி காலங்களில் அவர் ஊக்கத்தொகை பெற்றவர் எனவும், அதனாலையே அவருக்கு வேலையற்றவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் அல்லாத நாட்டு பிரஜைக்கு அது பொருந்தாது எனவும்,

ஆனால் மிகவும் தகுதியான விஞ்ஞானிகள் போன்றவர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி 6 மாத காலம் வேலை தேடலாம் எனவும், அந்த சலுகையானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை பிரதீப் அனுபவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரதீபின் முறையீடை விசாரித்த சமூக பாதுகாப்பு நீதிமன்றமானது 2018, ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜூலை மாதம் 10 ஆம் திகதி பிரதீபின் குடியிருப்பு அனுமதியானது முடிவுக்கு வருகிறது. இது தம்மை அச்சுறுத்தும் நடவடிக்கை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் தற்போது நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்வரை அவர் சுவிட்சர்லாந்தில் தங்கும் அனுமதியை பாஸலில் உள்ள குடிவரவு திணைக்களம் வழங்கியுள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் தமக்கு வேலை கிடைத்துள்ளதாகவும், ஜூன் மாதம் பணியில் சேர இருப்பதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சுவிஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கு தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers