சுவிட்சர்லாந்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ள ஒரு ஆய்வு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

முதன்முறையாக சுவிட்சர்லாந்து முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், 60 சதவிகிதத்திற்கும் அதிகமான சுவிஸ் இளைஞர்களுக்கு உயிரணுக்களில் குறைபாடு உள்ளதாக தெரிவிக்கின்றன.

ஜெனீவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ராணுவ தேர்வுக்காக வந்திருந்த 18 முதல் 22 வயது வரையுள்ள 2,500 பேரிடம் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஒரு மில்லி லிற்றர் விந்து திரவத்தில் 40 மில்லியன் உயிரணுக்களுக்கு குறைவாக இருந்தால், திருமணத்துக்கு பின் மனைவியை கருவுறச் செய்வதற்கு அதிக காலம் பிடிக்கும்.

இந்நிலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 17 சதவிகிதம் பேருக்கு ஒரு மில்லி லிற்றர் விந்து திரவத்தில் 15 மில்லியன் உயிரணுக்கள் மட்டுமே இருந்தன.

ஒரு மில்லி லிற்றர் விந்து திரவத்தில் 15 மில்லியன் உயிரணுக்கள் மட்டுமே கொண்ட ஒரு ஆணால் தன் மனைவியை கருவுறச் செய்வது கடினம்.

பிரச்சினை உயிரணுக்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, உயிரணுக்களின் நீந்தும் திறனும்தான்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் கால்வாசிபேர் நீந்தும் திறன் கொண்ட உயிரணுக்களை 40 சதவிகிதம் மட்டுமே கொண்டிருந்தனர்.

இதுபோக, 40 சதவிகிதம் பேர், 4 சதவிகிதத்திற்கும் குறைவான ஆரோக்கியமான உயிரணுக்களை மட்டுமே கொண்டிருந்தனர்.

மொத்தத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு உயிரணுக்களில் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டது. 5 சதவிகிதம் பேருக்கு எல்லா பிரச்சினைகளுமே இருந்தன.

முக்கியமாக, கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் புகைபிடிப்பதற்கும் பிள்ளைகளின் உயிரணுக்களின் தரத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரச்சினைக்குரிய நபர்களில் 18 சதவிகிதம் ஆண்களின் தாய்மார் கர்ப்ப காலத்தில் புகைபிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers