தமிழர் களறியில் தமிழர் வரலாறுசொல்லும் புகழேந்தி ஐயாவின் ஓவியங்கள்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

தமிழர் களறியில் தமிழர் வரலாறுசொல்லும் புகழேந்தி ஐயாவின் ஓவிய நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சுவிற்சர்லாந்து பேர்ன் நகரில் நடைபெற்றுள்ளது.

ஓவியர் புகழேந்தி தனது 16 வது வயதிலேயே ஓவியத்தின் மீது முழு ஈடுபாடு கொண்டு, குடந்தை கவின் கலைக்கல்லூரியில் வண்ண ஓவியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ஓவியராவார்.

ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வண்ண ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று கவின் கல்லூரியில் பேராசிரியராகப் பணியும் புரியும் இவரது திறன் தமிழுலகறிந்ததாகும்.

உயிர்கள் மீது அன்பும், மக்கள் உரிமையில் அக்கறையும் கொணட இவர் மக்கள் கலைஞானகத் தன்னை நிறுவி நிலை நிறுத்திக்கொண்டவராவார்.

தமிழகத்திலும், தமீழத்திலும் பல் ஊர்களில் ஓவியக் கண்காட்சியைகளை பரவலாக நடாத்தி பாமரர்களையும் கருத்தோவியத்தை நுகரச் செய்த சிறப்பும் இவருக்கு உண்டு.

ஈராயித்து ஓராம் ஆண்டு பாரதத்தில் குஜராத் பூகம்பத்தில் கொத்துக்கொத்தாய் மனிதர்கள் செத்தும் இடர்பாடுகளில் மாட்டிக்கொண்டும் பட்ட வலிகளை கருவாக வைத்து சிதைந்த கூடு என்னும் தலைப்பில் 150 அடி நீளமுள்ள மிக நீண்ட ஓவியத்தினை வரைந்து மனித மனங்களை வெற்றிருந்தார்.

திசைமுகம் என்னும் தலைப்பில் பெரியாரை வரைந்து இவர் நடத்திய ஓவியக்கண்காட்சியும் இவரது சமூக அடக்குமுறைக்கு எதிரான கலையாக மிளிர்ந்தது.

இரண்டாயிரத்தில் உறங்கா நிறங்கள் என்னும் தலைப்பில் மலேசியா, சிங்கப்பூர், சிகாகோ, வாசிங்டன், கனடா, பாரிஸ் ஆகிய பெருநகரங்களில் திசைமுகம், உறங்கா நிறங்கள் ஆகிய இருவகை ஓவியங்களையும் ஒரே கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.

ஈழத்தில் போராளிகளுக்கும், மாணவர்களுக்கும், இவர் பல பயிற்சிகள் அளித்திருந்தார். ஈழத்தில் போர்ப்பயிற்சிக் கல்லூரிகளில் போராளிகளுக்கு ஓவியம் கற்பித்து தேசத் தலைமகன் நெஞ்சத்தில் நீங்காத இடத்தையும் புகழ் என்று அழைக்கப்படும் புகழேந்தி அண்ணை பெற்றுள்ளார்.

இவரது படைப்புக்கள் பல தடவைகள் சுவிற்சர்லாந்தில் பொதுத் தமிழ் அமைப்புக்களாலும், மாணவர்களாலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் களறி ஆவணக்காப்பகம் கடந்த 19.05.19 திறந்துவைக்கப்;பட்டபோது இவரது பல ஓவியங்கள் நிiலாயகக் காட்ச்சிப்படுத்தப்பட்;டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தையும், போர்முகத்தையும், அதன் வலிகளையும், பேரினவாத அரசின் மானிடம் வெட்கித் தலைகுனியும் பெரும் துன்புறுத்தல்களையும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அவலத்தையும் இவரது ஓவியங்கள் மொழிகடந்து தடம்பதித்துக் காட்டி நிற்கிறது.

தமிழர் களறி அமைந்திருப்பது ஐரோப்பாத்திடலில் பல்சமய இல்லத்தில் சைவநெறிக்கூடத்தில் ஆகும். இப் பல்சமய இல்லத்தின் தலைவர் திரு. தாவித் லொயிற்விலெர் ஒரு சுவிஸ் நாட்டவர், இவ் ஓவியங்களைக் கண்ணுற்று, ஆவணக்காப்பகத்தையும் நூலகத்தையும் சென்று பார்த்துள்ளார்.

இதில் இவர் கூறுவதாவது,“எனக்குத் தமிழ் மொழி தெரியாது, ஆனால் இன்று தமிழர்களை அறிந்து கொண்டேன், மொழி புரியாத போதும் எனது உள்ளம் இந்த இனம் கடந்த வலியை இந்த ஓவியங்களால் கண்டுணர்கிறேன். அடிவயிற்றில் இருந்து ஒரு வலி வந்து உன் உடலை நடுங்க வைக்கிறது. என்னால் தொடர்ந்து பேசமுடியாது கண்களும் பனிக்கிறது, உங்கள் வரலாற்றில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் அடுத்த தலைமுறைக்கும் இக் கற்றலை கடத்திச் செல்லுங்கள்” என்பதாகும்.

தமிழர் களறியில் அண்ணன் புகழேந்தியின் ஓவியங்கள் மொழிகடந்து தமிழர் வரலாற்றைப் பதிவுசெய்து கடத்தி நிற்கிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers