சுவிட்சர்லாந்தில் மனைவி மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கணவன்: நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் மனைவி மீது கணவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெர்ன் மண்டலத்தில் உள்ள Herzogenbuchsee பகுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் சனிக்கிழமை பகல் நடந்துள்ளது.

இதில் அந்த பெண்மணி காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட நபரை அப்பகுதியில் உள்ள மக்கள் தடுத்து நிறுத்தி, அந்த பெண்மணியை காப்பாற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்துவந்த பொலிசார், உடனடியாக காயமடைந்த பெண்மணியை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே காயத்துடன் மீட்கப்பட்ட பெண்மணியின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பெர்ன் மண்டல பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers