சுவிட்சர்லாந்தில் பெரும் பொருளிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து: பல வாகனங்கள் தீக்கிரை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லொகார்னோ பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல மரச்சாமான் கடைக்கு சொந்தமான வாகனங்கள் தீக்கிரையானதில் பெரும் பொருளிழப்பு ஏற்பட்டுள்ளது.

சுவிஸில் Pfister மரச்சாமான் நிறுவனத்திற்கு சொந்தமான 3 விநியோக வாகனங்கள் புதனன்று சுமார் 11 மணி அளவில் தீக்கிரையாகியுள்ளது.

தீ விபத்து தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

விநியோக வாகனங்கள் தீப்பிடித்ததில், அருகில் இருந்த மரச்சாமான் கடையின் ஒருபகுதியும் தீக்கிரையாகியுள்ளது.

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஆனால் பொருளிழப்பு தொடர்பில் ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீ விபத்து ஏற்பட கரணம் தொடர்பில் உறுதியான காரணம் ஆராயப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers