சுவிட்சர்லாந்தில் அதிகாலையில் கேட்ட துப்பாக்கிச் சத்தம்... அலறிய பெண்: 3 பேர் பரிதாப மரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.

இதனிடையே பெண் ஒருவர் அலறும் சத்தமும் கேட்டுள்ளது. இச்சம்பவங்களால் அதிர்ச்சிக்கு உள்ளான அப்பகுதி குடியிருப்புவாசிகள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், தொடர்புடைய குடியிருப்பை சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென்று மீண்டும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அந்த குடியிருப்பில் என்ன நடந்தேறுகின்றனது என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகாத நிலையில்,

சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர், அந்த குடியிருப்பில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கி குண்டுக்கு பலியானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

60 வயதான முதியவர் 3-வது வட்டத்தில் இருக்கும் தமது குடியிருப்பில் 2 பெண்களை பிணைக்கைதிகளாக வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

பொலிசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தவறினால், இரு பெண்களும் கொல்லப்படலாம் எனவும் அச்சம் எழுந்தது.

இதனிடையே அந்த நபருடன் தொடர்புகொள்ள பொலிசார் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில்,

சுமார் 8.30 மணியளவில் திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கையில் களமிறங்கிய பொலிசார், அந்த குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

அங்கே, குற்றுயிரான நிலையில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் உயிருக்கு போராடுவதை கண்டறிந்தனர்.

அவர்களை மீட்டு முதலுதவி அளிக்கும் நிலையில், மூவரும் சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை பொலிசார் மீட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers