சுவிஸில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்... தற்கொலை செய்துகொண்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர் தொடர்பில் பொலிஸ் விசாரணை இறுக்கமடைந்துள்ளது.

சூரிச் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த வியாழனன்று 74 வயது முதியவர் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அந்த முதியவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் கொலை தொடர்பான எந்த ஆதாரங்களும் பொலிசாரிடம் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆர்காவ் மண்டலத்தில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் தொடர்பில் விசாரிக்கவே பொலிசார் சூரிச் நகரில் குடியிருக்கும் அந்த முதியவரின் குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.

ஆனால், அந்த முதியவரின் சடலத்தை மட்டுமே பொலிசாரால் மீட்க முடிந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட முதியவரின் மகனாக இருக்கலாம் எனவும்,

ஆனால் அந்த இளைஞரை இவர் மகனாக ஏற்கவில்லை என்பதாலையே இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த விடயத்தை பொலிசார் உறுதி செய்யவில்லை. இரண்டு மரணம் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு பின்னரே அதன் பின்னணி தெரியவரும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முதியவரின் கொலையானது அவரது குடியிருப்புக்கு அருகாமையில் குடியிருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers