ஆண் தன்மை அதிகம் கொண்ட விளையாட்டு வீராங்கனை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனையான Caster Semenya, வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் டெஸ்டோஸ்டிரான் என்னும் ஆண் ஹார்மோன் கொண்டவர்.

இதனால் சர்வ சாதாரணமாக பெண்களுக்கான ஓட்டப்பந்தயங்களில் ஜெயித்து வந்தார் அவர். இது குறித்து விமர்சனங்கள் அதிகரித்தபடியே இருந்தன.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், விளையாட்டுகள் தொடர்பான விடயங்களில் முடிவெடுக்கும் நீதிமன்றம் ஒன்று, விளையாட்டு வீராங்கனைகளின் உடலில் டெஸ்டோஸ்டிரான் அதிக அளவில் இருந்தால், அதை குறைக்க அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய விதியை அறிமுகம் செய்ய வேண்டும் என தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கத்திற்கு உத்தரவிட்டது.

பலரும் இந்த விதி Semenyaவைக் குறிவைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக கருதினார்கள்.

இந்த தீர்ப்பை எதிர்த்து Semenya சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

ஃபெடரல் நீதிமன்றமும் Semenyaவுக்கு எதிரான விதியை அமுல்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அது மட்டுமின்றி Semenyaவின் மேல் முறையீட்டு வழக்கு நிலுவையிலிருக்கும் வரையில், பெண்கள் பிரிவிலேயே விளையாடவும், Semenyaவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள Semenya, ஃபெடரல் நீதிமன்றத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, மேல் முறையீட்டுக்கு பிறகு தடையின்றி தன்னால் மீண்டும் ஓட முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers