தொடரும் கத்தி கலாச்சாரம்.. பாதை மாறும் இளைஞர்கள்: குற்ற நகரமாகும் சூரிச்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெரிய நகரங்களில ஒன்றான சூரிச்சில், கத்தியால் நிகழ்த்தப்படும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி தெரியவந்துள்ளது.

இந்த வார இறுதியில் தொடர்ந்து இரண்டு வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. 26 வயதுடைய இளைஞன் கையில் குத்தப்பட்டுள்ளார் மற்றும் 15 வயதான சிறுவனின் மேல் உடலில் கத்தி குத்து காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற இதே போன்ற வன்முறை தாக்குதல் தொடர்பில் இந்த வாரமும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த குற்றங்கள் தொடர்பில் இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்படும், அதே சமயம் இளைஞர்களை குறிவைத்தே இத்தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி 2018 ஆம் ஆண்டின் முடிவில் இருந்து 25 சதவீகிதம் கத்தியால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் அதிக தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என தெரியவந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்களின் படி, பெரும்பாலான சம்பவங்களில் 18 முதல் 24 வயது வரையிலான ஆண்கள் சம்பந்தப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers