18 வயது மகளுக்கு மிரட்டல் விடுத்தவரை குறித்து துப்பு கொடுத்தால் பரிசு: தந்தையின் அறிவிப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

தனது மகளை இணையம் வாயிலாக மிரட்டியவர் குறித்து தகவல் அளித்தால் பரிசு கொடுப்பதாக அறிவித்துள்ளார் சுவிஸ் தந்தை ஒருவர்.

சுவிட்சர்லாந்திலுள்ள Sankt Gallen நகரில் வசிக்கும் ஒருவரின் மகளுக்கு இணையம் வாயிலாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

அனாமதேய செய்தி ஒன்றின் வாயிலாக அந்த 18 வயது பெண் கொலை செய்யப்படப் போவதாகவும், அவரது குடும்பம் முழுவதும் அழிக்கப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

பொலிசாரிடம் அந்த மிரட்டல் குறித்து புகாரளித்தபோது, கணினியின் IP முகவரியை வைத்து தேடியதில், அந்த கணினி அந்த மாணவியின் வகுப்புத்தோழன் ஒருவனின்வீட்டில் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, அந்த வீட்டிலுள்ள யார் வேண்டுமானாலும் அந்த செய்தியை அனுப்பியிருக்க வாய்ப்புள்ளது என்று கூறி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அந்த மாணவியின் வகுப்புத்தோழன் ஒருவன்தான் அந்த மிரட்டலை விடுத்திருக்க வேண்டும் என அந்த பெண்ணின் தந்தை நம்பினாலும் அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

எனவே அந்த மாணவியின் தந்தை, இந்த மிரட்டல் குறித்து யாராவது தகவல் அளித்தால் அவருக்கு 2000 சுவிஸ் ஃபராங்குகள் பரிசளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த பரிசுத்தொகை, பள்ளியில் உள்ள மாணவர்கள் ஆதாரத்தை அளிக்க முன்வருவதற்கு தூண்டுதலாக இருக்கும் என அந்த தந்தை நம்புகிறார்.

பதின்ம வயதினரால் ரகசியத்தை காப்பாற்ற முடியாது என்கிறார் அவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers