சுவிஸில் வீடு புகுந்து பெண்மணி மீது துப்பாக்கிச் சூடு: திணறும் விசாரணை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்ட பெண்மணி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

பெர்ன் மண்டலத்தின் Herzogenbuchsee பகுதி குடியிருப்பு ஒன்றில் தனியாக இருந்த 78 வயது பெண்மணி துப்பாக்கி குண்டு காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டார்.

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை கைது செய்த பொலிசார், அவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட பல எண்ணிக்கையிலான ஆயுதங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த குறித்த பெண்மணி 3 வாரங்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அந்த நபர், குறித்த பெண்மணி மீது துப்பாக்கியால் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அந்த பெண்மணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்