சுவிட்சர்லாந்தில் கடும்புயல்: பெண் சுற்றுலாப்பயணி பலி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் இடியுடன் வீசிய புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஜெனீவா ஏரியில் மூழ்கி ஒரு பெண் சுற்றுலாப்பயணி உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகள், குறிப்பாக ஜெனீவா, பலத்த மழை, பெரிய பனிக்கட்டிகளுடன் பொழிந்த ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பெண் சுற்றுலாப்பயணி ஒருவர், Vésenaz பகுதியில் படகில் செல்லும்போது பலத்த புயல் காற்றினால் அவரது படகு தண்ணீரில் மூழ்கியது.

அதே படகில் பயணம் செய்த ஒரு ஆண், துறைமுகம் வரை நீந்தி தப்பியதோடு, எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பும் துப்பாக்கியின் உதவியால் வானத்தை நோக்கி சுட்டார்.

அதைக் கண்ட பொலிசார் மூன்று படகுகளில் உதவிக்குழுவினருடன் அங்கு விரைந்தனர். தண்ணிரில் கிடந்த அந்த பெண்ணைக் கண்ட அவர்கள், ஹெலிகொப்டர் உதவியுடன் அவரை ஜெனீவா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

புயல் பாதிப்பினால் ஜெனீவா தீயணைப்பு அலுவலகத்துக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வர, தீயணைப்புப் படையினர் சுமார் 500 இடங்கள் வரை சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers