மனைவியுடன் சண்டை: வீட்டைக் கொளுத்திய மன நல மருத்துவர்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக, மன நல மருத்துவர் ஒருவர் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Jonschwil பகுதியில் பிரபல மன நல மருத்துவர் ஒருவர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் வீட்டையே தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

பெயர் குறிப்பிடாமல் வெறும் RF (72) என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த மருத்துவர், சிறார் மற்றும் பதின்ம வயதினரின் மன நலம் தொடர்பான சிறப்பு மருத்துவராவார்.

தீ வைத்தபோது வீட்டிலிருந்த மருத்துவரின் மனைவி காயங்கள் எதுவும் இன்றி தப்பியுள்ளார்.

அவர்களது 5 வயது குழந்தை சம்பவம் நடந்தபோது வீட்டில் இல்லாததால் உயிர் தப்பியுள்ளது.

ரொமேனியாவில் பிறந்து இஸ்ரேலில் வளர்ந்த அந்த மருத்துவர், சூரிச் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு வந்திருக்கிறார்.

அக்கம்பக்கத்தவர்கள், அருமையான தம்பதி என வர்ணிக்கும் தம்பதியருக்குள் என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை.

அந்த மருத்துவருக்கு இது முதலாவது திருமணம் இல்லையென்றும், ஏற்கனவே ஒருமுறை திருமணமான அவருக்கு, வளர்ந்த இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் அயலகத்தார் கூறுகின்றனர்.

பெரும்பாலும் அந்த மருத்துவர் வீட்டுக்கு வருவதில்லை என்றும், அவரது மனைவிதான் குழந்தைகளை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தீப்பற்றி எரிந்ததில் அவர்களது வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 100,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்