கிம் ஜாங் உன் சர்வாதிகாரியாக மாற சுவிஸ் வாழ்க்கையும் ஒரு காரணமா? புயலைக் கிளப்பும் தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சர்வாதிகாரியாக மாற அவரது சுவிஸ் வாழ்க்கையும் ஒரு காரணம் என நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமது மாணவர் காலத்தை சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் செலவிட்டுள்ளார்.

தமது சித்தியுடன் பெர்ன் மண்டலத்தில் 1996 முதல் 1998 ஆம் ஆண்டு வரை தங்கியிருந்த கிம் ஜாங் உன்,

இங்குள்ள பாடசாலையில் கல்வி பயின்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு தமது 27 ஆம் வயதில் வடகொரியாவின் தலைவராக கிம் பொறுப்பேற்றபோது,

அவர் மீது உலகமெங்கிலும் உள்ள தலைவர்களுக்கு நம்பிக்கை இருந்தது என வடகொரியா குறித்து ஆராய்ந்துவரும் அன்னா ஃபைஃபீல்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வாழ்க்கையின் தாக்கம் கிம்மிடம் இருக்கும் என எதிர்பார்த்தது மட்டுமின்றி, வடகொரியா கண்டிப்பாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

கிம் ஜாங் உன் சுவிட்சர்லாந்தின் நவீன சமுதாய சூழலில் வாழ்ந்தார். மட்டுமின்றி பாடசாலையில் வெவ்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் தொடர்பில் கற்றுத்தரப்பட்டது.

ஆனால் இதுவே அவரை ஒரு சர்வாதிகாரியாக பின்னாளில் உருமாற்றியது என அன்னா தமது கிம் ஜாங் தொடர்பான புதிய புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் தமது குழந்தை பருவத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் கிம் ஜாங் உன் கழித்ததாக கூறும் அவரது சித்தி,

மிகவும் சாதாரண குடிமக்களை போலவே சுவிட்சர்லாந்தில் அவர் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி சுவிஸில் அவருக்கு நண்பர்கள் வட்டம் இருந்ததாகவும், அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை அதிகம் விரும்பியும் உள்ளார்.

அமைதி மற்றும் ஜனநாயகத்தை சுவிஸ் நாட்களில் அனுபவித்த கிம் ஜாங் உன், அதனால் எந்த பயனும் இல்லை என்பதையும் உணர்ந்ததாக அன்னா தமது புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிம் ஜாங் உன் 8 வயதான போது, வடகொரியாவின் அடுத்த தலைவர் இவர்தான் என்ற முடிவுக்கு அதிகாரிகள் தரப்பு வந்துள்ளது.

இதனால் நீதிமன்றமும் அதிகார வர்க்கமும் அந்த 8 வயது சிறுவனை தெண்டனிட்டு வணங்கத் துவங்கியது. இது அவருக்கு நாளடைவில் அதிகார போதையை ஊட்டியுள்ளது.

மேலும், தமது கட்டுப்பாட்டில் இருக்கும் சமூகத்தை அப்படியே எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தாமல் பாதுகாத்துவந்தால், அங்கே தாம் தான் தலைவராக நீடிக்கலாம் என்ற கருத்தியலையும் சுவிஸ் வாழ்க்கையே அவருக்கு உணர்த்தியிருக்கலாம் என அன்னா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்