சுவிட்சர்லாந்திடம் சவுதி பத்திரிகையாளர் ஜமாலுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் முக்கிய வேண்டுகோள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சவுதி அரேபியாவால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமாலுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண், சவுதி மீது தடைகளை விதிக்குமாறு சுவிட்சர்லாந்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில், நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாமலே ஒருவரை கொலை செய்தல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஜெனீவாவில் கூடியிருக்கும் நிலையில், ஜமாலுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண்ணான Hatice Cengiz, இந்த விடயத்தை முன்வைத்துள்ளார்.

ஜமால் கொலையில் சவுதியின் பங்கு குறித்த கேள்விகளுக்கான விடைகளை பெறும் வகையில், சுவிட்சர்லாந்து சவுதி மீது தடைகளை விதிப்பதன் மூலம் முக்கிய பங்காற்றலாம் என்று கூறிய Cengiz, அனைத்து நாடுகளும் தடைகளை தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகளுக்கான சுவிஸ் தூதரான Valentin Zellweger, இஸ்தான்புல்லின் சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் மீது நியாயமான நீதி விசாரணை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சவுதி அரேபிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெனீவாவில் கூடிய பத்திரிகையாளர்களிடம் பேசிய Cengiz, ஜமால் கொலை வழக்குடன் சுவிட்சர்லாந்துக்கு தொடர்பில்லை என்றாலும், வழக்கு தொடர்பான முயற்சிகளை ஊக்குவிக்க, அது ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயலாற்றலாம் என்று கூறினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers