13 ஆயிரம் கோடி மோசடி.. நீரவ் மோடியின் வங்கி கணக்குகளை முடக்கிய சுவிஸ் அரசு!

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

இந்திய தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரிக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகளை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தார். அதன் பின்னர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ மற்றும் அமலாத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவர் லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.

அதன் பின்னர் லண்டன் பொலிசார், கடந்த மார்ச் 19ஆம் திகதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு ஜாமீன் கொடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Reuters

இந்நிலையில், அமலாக்கத்துறை அளித்த புகாரின் பேரில், சுவிட்சர்லாந்தில் உள்ள நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடிக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், அவர்களின் ரூ.283.16 கோடி கருப்புப் பணம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று சுவிஸ் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers