சூரிச் நகரின் குப்ரிஸ்ட் சுரங்கம் பகுதியில் பராமரிப்பு பணிகளால் ஏற்பட்ட வாகன நெரிசலின் இடையே பொதுமக்களை முகம் சுழிக்கவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதனன்று மாலையில் குப்ரிஸ்ட் சுரங்கம் பகுதியில் வாகன நெரிசலில் சிக்கி சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த ஜோடி ஒன்று,
அவர்களின் காருக்குள் உறவில் ஈடுபட்ட சம்பவம் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிய முடியுமா என்பது குறித்து பொலிசார் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
வாகன நெரிசல் குறித்து போதிய அக்கறை இல்லாததாலும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காவவும் அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம் என பொலிசார் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக குப்ரிஸ்ட் சுரங்கம் பகுதியில் விபத்து ஒன்று ஏற்பட்டதாகவும், இதனாலையே வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
21.50 மணியளவில் விபத்து தொடர்பில் தகவல் வெளியானாலும், அப்பகுதியில் உள்ள வாகன நெரிசல் குறைவதற்கு 23.15 மணியானதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.