வெளி நாடுகளில் வேலை செய்வோருக்கு ஒரு பயனுள்ள செய்தி: ஆய்வு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளி நாடுகளுக்கு சென்று வேலை செய்வோருக்கு பயன்படும் விதமாக ஆய்வு ஒன்றை அமெரிக்க நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ளது.

அதன்படி எந்த நாட்டில் வேலை செய்வோருக்கு அதிக உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்பதை பணி வழங்குவோர் முடிவு செய்வதற்கு வசதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Mercer என்னும் அந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள், உலகிலேயே அதிகம் விலைவாசி உள்ள நகரங்கள் எவை என்ற விவரத்தை கூறுகின்றன.

உலகிலேயே அதிகம் விலைவாசி உள்ள நகரங்கள் பட்டியலில் ஹாங்காங் முதலாவது இடத்தையும், டோக்கியோ இரண்டாவது இடத்தையும், சிங்கப்பூர் மூன்றாவது இடத்தையும், தென்கொரிய தலைநகரான சியோல் நான்காவது இடத்தையும், சூரிச் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அதாவது இன்னொரு வகையில் பார்த்தால், ஐரோப்பாவிலேயே அதிகம் விலைவாசி உள்ள நகரங்கள் பட்டியலில் சூரிச் முதலிடம் பிடித்துள்ளது.

எனவே தங்கள் சொந்த நாட்டை விட்டு சுவிட்சர்லாந்துக்கு வந்து வேலை செய்வோர் சூரிச்சில் மட்டுமல்ல, பெர்ன் மற்றும் ஜெனீவாவிலும் பெருந்தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஏனென்றால், ஐரோப்பாவிலேயே அதிகம் விலைவாசி உள்ள நகரங்கள் பட்டியலில் பெர்ன் நகரம் இரண்டாவது இடத்தையும், ஜெனீவா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஆனால் இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும், அதாவது, தங்கள் சொந்த நாட்டை விட்டு சுவிட்சர்லாந்துக்கு வந்து வேலை செய்வோருக்கு சுவிட்சர்லாந்து விலைவாசி அதிகமான நாடாக தோன்றினாலும், அங்கு ஊதியமும் அதிகம் என்பதை மறுக்க முடியாது.

2018ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தில் எக்ஸிகியூட்டிவ் மற்றும் மூத்த மேலாளர் பொறுப்பு வகிப்போருக்கு சராசரி ஊதியமாக 119,000 சுவிஸ் ப்ராங்குகள் வழங்கப்பட்டதாக இந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்