விமான நிலையத்தில் 27 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட சுவிஸ் பயணிகள்: ஒரு இளைஞரின் அனுபவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

பிரான்சில் இருந்து ஜெனிவா வரவிருந்த ஈஸிஜெட் பயணிகளை 27 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரான்சின் Corsica பகுதியில் இருந்து புதனன்று பகல் ஒரு மணிக்கு ஜெனிவா புறப்பட வேண்டிய ஈஸிஜெட் விமானமானது, வியாழன்று மாலை 5 மணிக்கே அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணம் செய்த சாமுவேல் என்ற இளைஞர், தமது அனுபவத்தை சமூக வலைதளம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

முதலில் ஒரு மணி நேரம் விமானம் தாமதமாக புறப்படும் என ஈஸிஜெட் நிர்வாகத்தால் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் பறப்பதில் சிக்கல் இருப்பதாகவும், அடுத்த நாள் வரை தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பயணிகள் அனைவரையும் ஹொட்டல் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பல பயணிகள், அவர்களது அவசரம் கருதி வேறு விமானங்களில் சுவிஸ் திரும்பியுள்ளனர்.

சாமுவேல் மட்டும் காத்திருந்துள்ளார். இறுதியில் வியாழனன்று திரும்பிய விமானத்தில் சாமுவேலுடன் ஒருசில பயணிகளே எஞ்சியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்