கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் சுவிஸ் பெண்மணி மீட்பு: காதலனின் அதிரவைத்த பதில்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் பெண்மணி ஒருவர் மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது காதலனின் விளக்கத்தை நீதிமன்றம் கோரியுள்ளது.

சூரிச் மண்டலத்தில் உள்ள ஹோர்கன் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக 62 வயதான சுவிஸ் நபரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மிகவும் கொடூரமானமுறையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் வயதான பெண்மணி ஒருவர் மீட்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட அவரது காதலன், 62 வயதான சுவிஸ் முதியவர், தமக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என விசாரணையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு எதிராக இருப்பதாக கூறி அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று, 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி இரவு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 62 வயது நபர், தம்மைவிட வயது மூத்தவரான காதலியை திடீரென்று கொடூரமாக தாக்கியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் அவர் பலத்த காயங்களுடன் தப்பியுள்ளார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

இருப்பினும் ஆத்திரமடங்காத அந்த நபர் தமது காதலியின் கழுத்தை நெரித்துள்ளார். தனது கைகளால் கழுத்தை நெரித்திருக்கலாம் அல்லது பொருள் ஏதேனும் பயன்படுத்தி தனது காதலியின் கழுத்தை அவர் நெரித்திருக்கலாம் என விசாரணை தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளார். அவரது உடலில் இருந்த காயங்கள், குறித்த பெண்மணி மிகவும் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணை தரப்பு பட்டியலிட்டுள்ளது.

கண்களில் இருந்தும் காதுகளில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் அவர் மீட்கப்பட்டது, மருத்துவர்களால் சாட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்