சுவிட்சர்லாந்தில் இறுகும் ஆசிரியர் பற்றாக்குறை: எந்த மண்டலத்தில் உச்சம்?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அடுத்த கல்வி ஆண்டு துவங்க உள்ள நிலையில், பெரும்பாலான பாடசாலை நிர்வாகங்கள் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் திண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் கல்வியில் சிறந்துவிளங்கும் சுவிஸ் பாடசாலைகள் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றன.

சுவிட்சர்லாந்தில் புதிய கல்வி ஆண்டானது ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் துவங்கும். இந்த நிலையில் பெரும்பாலான மண்டலங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உச்சம் தொட்டுள்ளது.

இதில் ஆர்காவ் மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதில் நிர்வாகங்கள் போரடி வருவதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி இங்குள்ள பாடசாலைகளில் சில பணிகளுக்கு விண்ணப்பங்கள் கூட வருவதில்லை என சில பாடசாலை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாத துவக்கத்தில் பெர்ன் மண்டலத்தில் இருந்து மட்டும் 80 வேலை வாய்ப்புகள் தொடர்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை சூரிச் மண்டலத்தில் இருந்து 270 பதவிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது.

பணியமர்த்த ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பெர்ன் மண்டல பெரும்பாலான பாடசாலை நிர்வாகங்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்களிடம் பணிக்கு திரும்ப ஆர்வம் உள்ளனவா என கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

மட்டுமின்றி சில பாடசாலைகள் தேவைக்கு ஏற்ப பயிற்சி ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொண்டுள்ளன.

சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு 10,000 ஆசிரியர்களின் தேவை இருப்பதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. இதில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் தேவை 7,000 எனவும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் தேவை 3,000 எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்