சுவிஸ் இளைஞர்கள் இருவருக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட சிக்கல்: இளம்பெண் அளித்த புகார்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்ற இரு சுவிஸ் இளைஞர்கள் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி கைதாகியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் இளைஞர்களில் ஒருவரை, பாதிக்கப்பட்ட இளம்பெண் அடையாளம் காட்டிய நிலையில் அவருக்கு பிணை தொகையாக 10,000 யூரோ விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளியன்று பகல், பாதிக்கப்பட்ட இளம்பெண் அடையாளம் காட்டிய நிலையிலேயே சுவிஸ் இளைஞர்கள் இருவரையும் பார்சிலோனா பொலிசார் கைது செய்துள்ளனர்.

பார்சிலோனா நகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் 22 வயதான இரு சுவிஸ் இளைஞர்கள் சம வயதுடைய இளம்பெண் ஒருவரை சந்தித்துள்ளனர்.

மூவரும் பிரஞ்சு மொழியில் பேசியதால், மிகவும் நெருக்கமாகியுள்ளனர். இந்த நிலையில் குறித்த ஸ்பானிய இளம்பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.

தனது நண்பர்கள் எவரும் அருகில் இல்லாத நிலையில், தனியாக சென்ற அவரை இந்த சுவிஸ் இளைஞர்கள் இருவரும் தொடர்ந்து சென்று துஸ்பிரயோகத்திற்கு முயன்றுள்ளனர்.

ஆனால் அது இவர்களுக்கு சாதகமாக அமையாத நிலையில், குறித்த இளம்பெண்ணை மிரட்டி, அருகாமையில் உள்ள கடற்கரைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர்.

அங்கே அந்த யுவதியை சுவிஸ் இளைஞர்கள் இருவரும் துஸ்பிரயோகம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் அந்த யுவதியை அங்கேயே விட்டுவிட்டு, கேளிக்கை விடுதிக்கு திரும்பியுள்ளனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட யுவதி தமது நண்பர்களை தொடர்புகொண்டு, நடந்ததை விளக்கியுள்ளார். அவர்கள் அளித்த தகவலின் பேரில் வழக்குப் பதிந்த பொலிசார், கேளிக்கை விடுதிக்குள் வைத்தே கைதாகியுள்ளனர்.

பின்னர் நடந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் கைதான இளைஞர்களில் ஒருவரை மட்டுமே அடையாளம் காட்டியதால், அவர் மீது துஸ்பிரயோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

எஞ்சிய இளைஞரை விடுவித்துள்ளனர். வழக்குப் பதியப்பட்ட இளைஞருக்கு 10,000 யூரோ பிணைத் தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...