சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

நெதர்லாந்து நாட்டவர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் வலாயிஸ் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, மலையிலிருந்து வழுக்கி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அந்த 54 வயது நபர் நெதர்லாந்திலிருந்து மலையேற்றத்திற்காக வந்த ஆறு பேர் கொண்ட குழுவில் ஒருவராவார்.

அவர்கள் மலையில் 2,560 மீற்றர் உயரத்தில் உள்ள ஒரு பனி நிறைந்த பகுதியை அடைந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக வலாயிஸ் பகுதி பொலிசார் தெரிவித்தனர்.

அந்த நபர் பனியை தாண்டிச் செல்ல முடிவு செய்து, அதற்கான முயற்சியில் இறங்கியபோது, வழுக்கி 200 மீற்றர் உயரத்திலிருந்து ஒரு பள்ளத்தில் விழுந்தார்.

மீட்புக்குழுவினரால் உடனடியாக உதவ முடியாத நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தையொட்டி, மலையேறுபவர்களை எச்சரித்துள்ள பொலிசாரும், மீட்பு பணியினரும், சுவிட்சர்லாந்தில் அதிக வெப்பம் நிலவும் அதே நேரத்தில், சில இடங்களில் இன்னும் பனி இருப்பதால் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்