பிறந்து ஒரு வருடமான குழந்தை... 230 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த துயரம்: இப்போது எப்படி இருக்கிறார்?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பிறந்து ஒரு வருடமேயான குழந்தை ஒன்று விசித்திரமான நோயால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையிலேயே இருந்து வருகிறது.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2018, ஜூலை 5 ஆம் திகதி டேனியல் ஸ்ப்ரெஞ்சர் தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு ராபின் மேக்ஸ் என பெயர் சூட்ட முடிவு செய்தனர்.

ராபின் மேக்ஸ் பிறந்த சில நிமிடங்களிலேயே, குழந்தையின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. உடனடியாக அங்குள்ள மருத்துவர்கள் குழு குழந்தை ராபினை அள்ளிச்சென்றுள்ளது.

அடுத்த 30 நிமிடங்களில் குறித்த மருத்துவமனையில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் St. Gallen பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நுரையீரல் தொடர்பான பிரச்சனை என்று கருதிய மருத்துவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ராபினுக்கு நுரையீரல் மட்டுமல்ல இருதயத்திலும் பிரச்சனை இருப்பதை அங்குள்ள மருத்துவர்கள் கண்டறிந்தது.

தொடர்ந்து சூரிச் நகரில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கே அந்த பிஞ்சு குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து 10 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தை ராபினை அதன் பின்னரே பெற்றோரை சந்திக்க அனுமதித்துள்ளனர்.

அதன் பின்னரும் சில வார காலம் மருத்துவ கண்காணிப்பில் இருந்த குழந்தைக்கு, கண்களில் கோளாறு இருப்பதாகவும், கேள்வி பாதிப்பு உள்ளது எனவும், நோய் எதிர்ப்பு சக்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சையில் இருந்து குழந்தை மீள்வது கடினம் என்றாலும், தங்களால் இயன்ற உயரிய சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாக குழந்தை ராபினின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உடல் நலம் தேறி வந்தாலும், எப்போது வேண்டுமானாலும் குழந்தைக்கு ஆபத்து நேரலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒரு வயதேயான ராபின் மேக்ஸ் இதுவரை 230 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.

மட்டுமின்றி சூரிச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த குழந்தையை காண நாள் தோறும் 120 கிலோ மீற்றர் தொலைவு பயணம் செய்துள்ளனர்.

இதுவரை அவர்கள் 55,000 கிலோ மீற்றர் பயணத்தில் செலவிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு தலைமறைவாக வேண்டும் என கருதியதாகவும், ஆனால் தங்களது பிள்ளைக்காக மட்டுமே வாழ்வதாகவும் டேனியல் ஸ்ப்ரெஞ்சர் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்