சுவிட்சர்லாந்தில் 7 வயது சிறுவன் மீது நடந்த பாலியல் தாக்குதல்: கொந்தளித்த தாயார்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் டிசினோ மண்டலத்தில் 7 வயது சிறுவன் மீது நடந்த பாலியல் தாக்குதல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிசினோ மண்டலத்தில் கடந்த வெள்ளியன்று சிறார்களுக்கான விடுமுறை முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முகாமில் வைத்தே 7 வயதான சிறுவன் மீது 9 வயதான சிறுவன் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவன் பாதுகாப்பாளரிடம் புகார் தெரிவித்த நிலையில், இச்சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார், தமது மகன் மிகவும் அமைதிகுலைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தாம் பொலிஸ் உதவியை நாட இருப்பதாகவும், 9 வயது சிறுவனுக்கு இப்படியான தூண்டுதல் ஏற்பட காரணம் என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய தமது எண்ணம் எனவும்,

குடியிருப்பில் அந்த சிறுவன் துஸ்பிரயோகத்திற்கு இரையாகியிருக்கலாம் அல்லது கடினமான சூழலில் அந்த சிறுவன் வளர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் பொலிசாரை நாடியுள்ளனர்.

குறித்த சிறுவன் விளையாட்டாக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், ஆனால் கண்டிப்பாக அச்சிறுவனின் பின்னணி தொடர்பில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்