சுவிஸ் ராணுவம், பாதுகாக்கப்பட்ட சுவிஸ் ஏரி ஒன்றில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெயைக் கொட்டி மீண்டும் சொதப்பியுள்ளது.
ராணுவ பயிற்சி ஒன்றின்போது நடந்த ஒரு தவறால், பாதுகாக்கப்பட்ட ஏரி ஒன்றில் 50 லிற்றர் எண்ணெயை கொட்டியது சுவிஸ் ராணுவம்.
Morgins ஏரிக்கருகில் உள்ள பகுதியில், காட்டுத்தீ தொடர்பான பயிற்சி ஒன்றில் ராணுவ வீரர்கள் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தண்ணீரை உறிஞ்சும் பம்பில் எதிர்பாராமல் தொழில் நுட்ப பிரச்சினை ஒன்று ஏற்பட்டது.
அதனால் அந்த பம்பிலிருந்து hydraulic fluid எனப்படும் எண்ணெய் கொட்ட ஆரம்பித்தது.
பாதுகாக்கப்பட்ட அந்த ஏரி, தேசிய அளவில் தவளைகள் முதலான உயிரினங்களை இனப்பெருக்கம் செய்யும் ஏரியாகும்.
உடனடியாக தீயணைப்பு வீரர்களும் பொலிசாரும் அங்கு வரவழைக்கப்பட, அவர்கள் நான்கு மணி நேரம் போராடி எண்ணெயை அகற்றினர்.
ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, இந்த சம்பவத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஏனென்றால் எண்ணெய் நீர்ப்பரப்பின் மேலேதான் உள்ளது, அதை அகற்றிவிடமுடியும் என்றார்.
சுவிட்சர்லாந்தில் தவளை முதலான இருவாழ்விகள் (amphibians) அழிவின் விழிம்பிலுள்ள உயிரினங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.