சுவிட்சர்லாந்தில் வேலை தேடுவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... நீங்கள் புலம்பெயர்ந்தோராக இருந்தாலும்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
368Shares

சுவிட்சர்லாந்தில் வேலை தேடுவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! ஆம், இன்னும் பத்து ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் பணிபுரிய 500,000 பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

ஒரு பெரிய கூட்டம் ஓய்வு பெற இருப்பதாலும், தொழிலாளர் சந்தையின் மாற்றங்களாலும் சுமார் 500,000 பணியிடங்கள் காலியாகும் வாய்ப்பு உள்ளது.

எனவே அடுத்த பத்து ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் பணிபுரிய சுமார் 500,000 பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

சுகாதாரம் மற்றும் முதியோரை கவனித்துக்கொள்ளுதல் போன்ற துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளும், மற்ற துறைகளில் குறைவான வேலை வாய்ப்புகளும் உருவாக இருக்கின்றன.

ஆண்டுக்கு 60,000 பேர் புலம்பெயர்த்து வரும் சூழலிலும், வேலை செய்வதற்கு 200,000 பணியாளர்கள் மட்டுமே கிடைப்பார்கள் என ஆய்வமைப்பு ஒன்று தெரிவிக்கிறது.

எனவே இந்த எண்ணிக்கை, தேவையை நிறைவேற்ற போதுமானதாக இராது. 1960களில் இருந்ததுபோல் வேலைவாய்ப்பு தேவை இருக்குமானால் அடுத்த பத்து ஆண்டுகளில் 300,000 பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் இருந்ததுபோல் தேவை இருக்குமானால், அடுத்த பத்து ஆண்டுகளில் 500,000 பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

என்றாலும், எல்லா துறைகளிலும் ஆட்கள் தேவைப்பட மாட்டார்கள். சரியாக சொல்லப்போனால், எந்த துறைகளில் அதிகம் பெண்கள் பணியாற்றுகிறார்களோ, அந்த துறைகளுக்குத்தான் அதிகம் ஆட்கள் தேவை, உதாரணமாக, சுகாதாரம் மற்றும் முதியோரை கவனித்துக்கொள்ளுதல் போன்ற துறைகள்.

எனவே பொதுவாக பெண்கள் மட்டும் பணியாற்றும் துறைகளில் உள்ள வேலைகளை ஆண்கள் முயற்சிப்பது நல்லது எனலாம்.

புலம்பெயர்ந்தோருக்கும் வாய்ப்புள்ளது என்றாலும், அவர்களை மட்டுமே வைத்து பணியிடங்களை நிரப்புவது, சமூக மற்றும் அரசியல் ரீதியான எதிர்ப்பை உருவாக்கும். எனவே பணியிடங்களை நிரப்ப புலம்பெயர்ந்தோருக்கு முன்னுரிமை கொடுப்பதில் பிரச்சினை உள்ளது.

எனவே அடுத்த சாய்ஸ், அதிக அளவில் பணிகளில் ஈடுபடுவது, அதாவது, 80 சதவிகிதம் பெண்கள் ஏற்கனவே வேலைக்கு சென்றாலும், அவர்களில் 45 சதவிகிதம் பேர் பகுதி நேரப் பணியாளர்களாகத்தான் உள்ளனர்.

எனவே பள்ளிக்கு செல்லும் வயதுடைய பிள்ளைகள் இல்லாத பெண்கள், தங்கள் வேலை நேரத்தை அதிகரித்துக் கொண்டு, தொழிற்சந்தையில் தங்கள் பங்களிப்பை அதிகப்படுத்தலாம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்